ARISIPERIYANKUPPAM

ஸ்ரீ விஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீ சுயம்பு சக்கரத்தாழ்வார் திருக்கோயில்

Saturday, 25 January 2014

ஸ்ரீ சுயம்பு சக்கரத்தாழ்வார் திருக்கோயில் அரிசிபெரியாங்குப்பம், கடலூர் மாவட்டம்.

ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சனா ஜெய ஜெய ஸ்ரீ சுதர்சனா

ஸ்ரீ சுயம்பு சக்கரத்தாழ்வார் திருக்கோயில்
அரிசிபெரியாங்குப்பம், கடலூர் மாவட்டம்.

        ஸ்ரீ விஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீ சுயம்பு சக்கரத்தாழ்வார் 
    திருக்கோயில்

ஸ்தலவரலாறு

ஸ்ரீ மதே ராமானுஜாய நம:


      
       ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் காத்து அருள் பாலித்து வருகிறார் அப்படிபட்ட நாராயணன் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்கிறபடி கலியுகத்தில் அர்ச்சா ஸ்வருபமாக அருள்கிறார். ஸ்ரீமன் நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்த போதும் அவரின் பஞ்ச ஆயுதங்களும் (சங்கு, சக்கரம், அம்பு-வில், கதை, கத்தி) பெருமாளுக்கு உருதுனையாக இருந்தது, அந்த பஞ்சாயுதங்களில் முக்கியமான சக்ராயுதம் மட்டும் பெருமாளிங் கட்டளைபடி (ஸ்ரீசுதர்சனம்)-சுகமான தரிசனம் கொடுக்கும் பெருமாளாக, பெருமாளின் அம்சமாகவே கலியுகத்தை காத்து அருளும் பொருட்டு ஸ்ரீ சக்கரத்தாழ்வாராக அவதாரம் புரிந்தார். மேலும் இந்த மலையின் அருகில் கடலால் சூழப்பட்ட காலத்தில் சைவ குரவர் அப்பர் கரையேரிய இடம், கரையேரிவிட்ட குப்பம் (ஊர்) திருக்கோயில் அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல்கள் சூழபட்ட காலத்தில் பெருமாள் மாசிமக சமுத்திர தீர்த்தவாரிக்கு இந்த மலையில் வந்தமர்ந்து பிந்தீர்த்தவாரி செய்யும் தருனத்தில் தன்னுடைய பஞ்சாயுதங்களையும், ஆபரனங்களையும் கழற்றிவைத்துவிட்டு தீர்த்தவாரி  முடித்து திரும்பி செல்லும் காலத்தில் தனது வலது கை ஆயுதமான சக்கராயுதத்தை உலக நன்மைகருதி பதித்து விட்டு சென்றதால் நாளடைவில் அந்த இடத்தில் தானாகவே சுயம்பு உரு கொண்டு ஓர் தூண் வடிவில்  நான்கு திசைகளையும் காக்கும் வண்ணம் உருவானவரே ஸ்ரீ சுயம்பு சக்கரத்தாழ்வார். அந்த கடல் அலைகளின் சீற்றத்தால் ஹரியின் இடக்கை ஆயுதமான சங்குகள் ஒதுங்கிய குப்பம் (ஹரி-சங்கு-குப்பம்) அரிசிபெரியாங்குப்பம் என்று நாளடைவில் மறுவியது.

எம்பெருமான் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சகல தோஷங்களையும் கஷ்டங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியவர். இவ்வூரில் மட்டுமே மலையின் மீது ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் மூலவர் சுயம்பு வடிவாக அமைந்து உள்ளார். இந்த எம்பெருமான் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்.

தெரிந்துகொள்ள வேண்டியவை:
மாசிமாதம், பரட்டாசி மாதம் சில குறிப்பிட்ட நாட்களில் காலை 06.15 - 06.28 மணிக்குள் சூரிய பகவான் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மீது ஒளி வீசுகிறார்.